About Us
வற்போர்ட் தமிழ்க் கல்விக்கூடம்
எங்கள் பாடசாலை 2007ம் ஆண்டு ஆனி மாதம் ஆரம்பித்து பதினாறு வருடங்கள் கடந்து நிற்கின்றோம். எம் தாய்மொழி தமிழை நாம் வாழும் புலம்பெயர் மண்ணில் எமது அடுத்த தலைமுறைக்கு எம் மொழியுணர்வு அழிந்து விடாது தலைமுறைகள் கடந்து தாய் மொழி செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது . நாம் வாழும் மண்ணில் தமிழ் பாடசாலை நிறுவ வேண்டும் என்ற திரு. சிவராஜா விக்கினேஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக 2007ம் ஆண்டு ஆனி மாதம் திரு . சண்முகரெட்ணம் நிஷாந்தன் மற்றும் பரமலிங்கம் ஸ்ரீதரன் ஆகியோர்களால் வற்போர்ட் தமிழ்க் கல்விக்கூடம் The Grange Academy, London Road, Bushey, WD23 3AA ல் ஆரம்பிக்கப்பட்டது
இப் பெரும் முயற்சிக்கு உறுதுணையாய் நின்று பயணித்த அமரர் திரு . தனபாலசிங்கம் , திரு . விஜயகரன் , திரு விக்னேஸ்வரன் , திரு . தனபாலன் , திரு . வேலாயுதம் , திருமதி . ஜெயகரன் . ஆகியோர்கள் இதன் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்தார்கள் .
ஆரம்ப நிர்வாக இயக்குனராக திரு . விஜயகரனும் அதன் பின் நிர்வாக இணைப்பாளராக
திரு . செல்வநாதனும் அதன் பின் நிர்வாக பொறுப்பாளராக திரு பா . கமலநாதனின் அவர்களின் நிர்வாகத்தின் ஒருங்கமைப்பில் இணைப்பாளராக திரு . விக்கினேஸ்வரனும் திரு . அருள்சிகாமணியும் திறம்பட பாடசாலையை நடாத்தி வந்தார்கள்
உலகை அச்சுறுத்தி உலுப்பிய கொரோனா தொற்று நோய் காரணமா இரண்டு வருடங்கள் கடந்து மீண்டும் பாடசாலை நிர்வாக பொறுப்பாளராக திரு பா . கமலநாதனின் அவர்களின் நிர்வாகத்தின் ஒருங்கமைப்பில் இணைப்பாளராக திரு . விக்கினேஸ்வரன் அவர்களால் மீண்டும் பாடசாலை கட்டி எழுப்பப்பட்டது
2007 – 2020 வரை இப் பாடசாலை வளர்ச்சியில் அர்ப்பணித்து உறுதுணையாய் நின்ற
திரு . விஜயகரன் , திரு . வேலாயுதம் , திரு . தனபாலன், திருமதி . ஜெயகரன் , திரு. குணசீலன் , திருமதி தயாநிதி செல்வநாதன் , திரு . சிவகரன் , திருமதி . சுகந்தி சிவகரன் , திரு சிவமனோகரன் , திருமதி . சுஜிதா குகனேசன் , திரு . பிரசன்னா , திரு கிரிதரன் , திருமதி . நிரஞ்சனா ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்
2007-2008 ஆரம்பகால உடற்பயிற்சி பயிற்றுனர்கள் திரு மயூரன் , திரு . செந்தூரன் ஆகியோரும் நன்றிக்குரியவர்கள்
வற்போர்ட் தமிழ்க் கல்விக்கூடமானது எமது சந்ததிக்கு எமது தாய் மொழியை கற்கும் தனது உயரிய பணியில் தொடர்ந்து பயணிக்கும்
தலைமை நிர்வாகி
திரு பா. கமலநாதன்
நிர்வாக ஒருங்கிணைப்பாளர் / ஆலோசகர்
திரு ச. நிஷாந்தன்
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்
திரு . க. பிரகாஷ்
ஆகியோர் நிர்வாக கட்டமைப்பில் இருந்து பாடசாலையை வழிநடத்த
தலமை ஆசிரியராக
திருமதி த. நிஷாந்தன்
உதவி தலைமை ஆசிரியர்
திரு க வர்ணகுலசிங்கம்
பாடசாலை நிதி மற்றும் அனுமதிப் பிரிவில்
திருமதி ஹே. உருத்திராங்கன்
உதவியாக
திருமதி . து. பிரகாஷ்
உணவகம்
திரு த. ஸ்ரீதரன்
உதவி திரு உருத்திராங்கன்
ஆகியோர் பாடசாலை வளர்ச்சிக்கு உறுதுணையாக தங்களின் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்
Watford Tamil Kalvikoodam
As the oldest continuously run educational institution, The School remains committed to providing an academically rigorous education to students who will walk out of school ready for lives of leadership and service to their community. From literacy to music and art, each day at the Watford Tamil Kalvi koodam is filled with activities that are both enriching and fun.

Everyday at the Watford Tamil Kalvikoodam is like a blessing with the active students and talented staff members around.
Our Counts
Mission Statement
Our mission at Watford Tamil Kalvikoodam is to develop the unique abilities and potential of each child by offering an enriched educational program. We strive for excellence through a hands-on approach. Rich traditions rooted in our innovative curriculum grow productive, caring, and intellectually curious citizens.